Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் படிப்பில் மாணவர்கள் குறைவான எண்ணிக்கை உள்ள பாடப்பிரிவில் சிலவற்றை மூடிவிட்டு புதிய பாடப்பிரிவுகள் ஆரம்பிக்க உள்ளதாகவும், பொறியியல் மாணவர்களுக்கு நேரடியாக தேர்வு நடத்தப்படும் என்றும், துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக கிண்டி வளாகத்தில் மாணவர்களை தொழில்முனைவோராக உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் துணைவேந்தர் வேல்ராஜ் முன்னிலையில் வெள்ளிக்கிழமை கையொப்பமானது.

இந்த ஒப்பந்தம் அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில் முனைவோர் ஒருங்கிணைப்பு மையம் அகமதாபாத்தில் உள்ள தொழில்முனைவோர் மையத்துக்கு இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் துணைவேந்தர் வேல்ராஜ் செய்தியாளர்களிடம் பேசியதாவது, மாணவர்களை தொழில் முனைவோர்களை உருவாக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் தொழில்முனைவோர்கள் அதிக அளவில் உருவாக்கப் படுவார்கள். பல்கலைக்கழகத்தின் மூலம் செய்யப்படும் ஆராய்ச்சிகளை சமுதாயத்திற்குத் தேவையான முறையில் வழங்கி பொருளாதார வளர்ச்சி பெற முடியும்.

மேலும் மாணவர்கள் ஒரு தொழில் அதிபர்களாக உருவாகுவதற்கு அகமதாபாத்தில் உள்ள தொழில் முனைவோர் நடத்திவரும் சான்றிதழ் படிப்புகளை மாணவர்கள் படிக்கும் போதே கூடுதலாக படிக்கலாம். இதனால் மாணவர்களுக்கு தொழிலதிபராக வர முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும்.
பொறியியல் முதுநிலைப் பாட பிரிவினை படிக்க வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அதனால் கடந்த 4 அல்லது 5 ஆண்டுகளில் 5-க்கும் குறைவாக மாணவர்கள் சேர்ந்த பாடப்பிரிவுகள் மூடப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்திலும், பாடப்பிரிவுகளை மூடிவிட்டு மாணவர்களுக்கு வேலை வாய்ப்புள்ள புதிய பாடப்பிரிவுகளை ஆரம்பிக்க உள்ளோம் என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |