Categories
பல்சுவை

சிலிண்டர் புக் பண்ணனுமா?…. ரொம்ப சுலபம்…. இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க….!!!!

வீட்டில் இருந்துகொண்டே மிக எளிதாக சமையல் சிலிண்டர் புக்கிங் செய்யலாம். மொபைல் போன் இருந்தாலே போதுமானது.
இண்டேன் கேஸ் வாடிக்கையாளர்கள் 77189555555 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு LBG எரிவாயு சிலிண்டருக்கு முன்பதிவு செய்யலாம். இதை தவிர வாட்ஸ்அப் மூலமாகவும் புக் செய்யலாம். அதற்கு REFILL என்று டைப் செய்து 7588888824 என்ற நம்பருக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பலாம். பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து மட்டுமே வாட்ஸ்அப் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

ஹெச்பி கேஸ் வாடிக்கையாளர்கள் 9222201122 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளலாம். பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து BOOK என டைப் செய்து 9222201122 என்ற எண்ணுக்கு அனுப்பவேண்டும். புக்கிங் மட்டுமல்லாமல் சிலிண்டர் மானியம் தொடர்பான தகவலையும் இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

பாரத் கேஸ் வாடிக்கையாளர் 1 அல்லது BOOK என டைப் செய்து பதிவுசெய்யப்பட்ட மொபைல் நம்பரிலிருந்து 1800224344 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். அதன் பின்னர் உங்கள் முன்பதிவு கோரிக்கை ஏஜென்சியால் ஏற்றுக்கொள்ளப்படும். இதுபற்றிய தகவல் உங்களுடைய வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

Categories

Tech |