தியேட்டரில் 50 சதவீத நபர்கள் அனுமதிக்க அரசு உத்தரவிட்டதை பின்பற்றுகிறார்களா என்பதை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் ஒமைக்ரான் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருப்பதால் பேருந்துகள், ஓட்டல்கள் மற்றும் தியேட்டர்களில் 50 சதவீதம் மக்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும். இந்நிலையில் சமூக இடைவெளியை பின்பற்றி முககவசம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி இம்மாவட்டத்தில் இருக்கும் 40 தியேட்டர்களிலும் சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து 50 சதவீதம் மக்கள் மட்டுமே தியேட்டர் உரிமையாளர்கள் அனுமதித்து வருகின்றனர். இதை தாசில்தார் பாலராமன், இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் திடீர் ஆய்வு செய்துள்ளனர்.
அப்போது சமூக இடைவெளியை பயன்படுத்தி பொதுமக்கள் முககவசம் அணிந்து பாதுகாப்பாக திரையரங்குகளில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்களா எனவும், 50 சதவீதம் பொதுமக்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்பதனையும் பார்வையிட்டு அவர்கள் ஆய்வு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவ்வப்போது தியேட்டர் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பான பொருட்கள் மற்றும் முறையாக கையுறை அணிந்து தின்பண்டங்கள், உணவு பொருட்கள் வழங்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.