மோடியின் பஞ்சாப் சம்பவத்திற்கு பின் அனைத்து மாநில காவல்துறை நிலையம் இனி மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் மோடி கடந்த புதன்கிழமை பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக சென்றார். தொடர்ந்து மோசமான வானிலை காரணமாக அவர் தனது காரில் பஞ்சாப் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து அவருடைய கார் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சிக்கலில் தள்ளப்பட்டார் பிரதமர் மோடி. இதனை அடுத்து பிரதமர் அங்குள்ள ஒரு மேம்பாலத்தின் மீது கால் மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார் . இந்த சம்பவம் நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பியது. பிரதமரின் பாதுகாப்பு குறித்து பாஜகவினர் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வந்தனர் . மற்ற கட்சியினர் இந்த பயணம் தடைபடுவதற்கு காரணம் அங்கு கூட்டம் வராதது தான் என கிண்டலாக தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து மோடி ஒரு புதிய திட்டம் தீட்டியுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, ஒரேநாடு, ஒரே கட்சி, ஒரே தேர்தல் என பாஜக தொடர்ந்து கூறிவருகிறது. மாநில அரசின் அதிகாரங்களை குறைப்பதற்கான வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறது.ஜிஎஸ்டிக்குப் பின்னர் மாநிலங்களின் வரி வருவாயும் ஒன்றிய அரசு மனது வைத்தால் மட்டுமே கிடைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதன் அடுத்தகட்டமாக மாநில அரசுகளின் கீழ் உள்ள காவல் துறையையும் தன் வசமாக்கும் வேலை நடைபெற உள்ளது. டெல்லி தனி மாநிலமாக இருந்தாலும் அதன் காவல்துறை ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ்தானே வருகிறது. அதேபோல் அனைத்து மாநில காவல்துறையையும் மாற்ற திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. இதனால் மாநில அரசிடம் இருக்கும் மிகக் குறைந்த அதிகாரமும் பறிக்கப்படும். இதற்கான வேலைகளை பஞ்சாப் சம்பவத்தை காரணமாக வைத்து மோடி அரசு தொடங்கியுள்ளது” என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தினர்.