ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை அணி கோவாவிடம் தோல்வியடைந்தது.
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி இப்போட்டி நடந்து வருகிறது.இதில் நேற்று இரவு நடந்த 54-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி-கோவா அணிகள் மோதின .இதில் கோவா அணியில் ஜார்ஸ் ஒர்டிஸ் 82-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
இதைத்தொடர்ந்து சென்னை அணி கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணானது. இறுதியாக 0-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணி கோவாவிடம் தோல்வியடைந்தது.இது கோவா அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். இதையடுத்து இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.