பிக் பாஸ் சீசன் 5 வில் கலந்துகொண்ட ராஜுவிற்கு படவாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளனர்.
பிக்பாஸில் பங்கேற்றுள்ள பிரபலங்களில் ஒருவர் ராஜு. இவர் திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்டவர். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான நட்புன்னா என்னன்னு தெரியுமா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் பல குரல்களில் பேசும் திறமை கொண்டவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிமிக்ரி செய்து ரசிகர்களை சிரிக்க வைத்த பெருமை இவரையே சேரும். பிக் பாஸில் சக போட்டியாளர்களிடம் கோபப்படாமல் அழகாக 100 நாட்களை நகர்த்தி விட்டார்.நோ ஹாட்டர்ஸ் லிஸ்டில் இருக்கும் இவர் வெற்றி பெற வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜுவுக்கு அடுத்தடுத்து 3 படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸின் ஃபிரிஸ் டாஸ்க்கின் போது வீட்டுக்குள் வந்த தனது மனைவியிடம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்குமா அல்லது வாய்ப்பு தேடி அலைய வேண்டுமா என்று கேட்டார் ராஜு.இந்நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வருவதற்கு முன்பாகவே அவருக்கு 3 படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.