Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக ஆட்சி ரொம்ப மோசம்…! எப்படி முகம் காட்டி பேசுறாரு…. ஈபிஎஸ்யை வச்சு செய்த அமைச்சர் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது, துப்பாக்கி கலாச்சாரம் வந்து விட்டது என்று சொல்கிறார். துப்பாக்கி கலாச்சாரம் யாரிடத்திலே வந்தது, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தபோது அப்பாவி மக்களை எங்கேயாவது சுட்டுக் கொன்றிருக்கோமா….

ஆனால் இதே ஸ்டெர்லைட் பிரச்சினை வரும் போது அப்பாவி மக்கள் 13 பேரை நிறுத்தி வைத்து ஒவ்வொருவராக குறிபார்த்து சுட்டுக்கொன்ற ஆட்சி, துப்பாக்கி கலாச்சாரத்தை தூக்கி பிடித்த ஆட்சி, சட்டம் ஒழுங்கை முற்றிலுமாக சீர்குலைத்து, சந்தி சிரிக்க வைத்து, காவல்துறைக்கு இருக்கக்கூடிய கௌரவத்தை குலைத்த ஆட்சி என்று கேட்டால் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி தான்

இன்னும் சொல்லவேண்டுமென்றால் டிஜிபியை பற்றி சொல்கிறார், டிஜிபி அறிக்கை விடுகிறார் என்று, அவருடைய ஆட்சியில் என்ன நடந்தது ? டிஜிபி என்று ஒருவர் இருந்தார், அதற்கும் மேலாக சிறப்பு டிஜிபி என்று ஒருவரை கொண்டு வந்து அந்த டிஜிபியை இயங்கவிடாமல் தடுத்த ஆட்சி எடப்பாடியார் ஆட்சி.

அப்படிபட்ட சிறப்பு டிஜிபி மேலேயே பாலியல் குற்றசாட்டு வந்து அவர் இன்றைக்கு நீதிமன்றத்திற்கு ஏறி இறங்கி கொண்டிருக்கிறார் என்று கேட்டால் எடப்பாடியின் ஆட்சியினுடைய லட்சணம் எந்த அளவிலே இருக்கிறது. அவர் இன்றைக்கு சட்டம் ஒழுங்கை பற்றி, பாலியல் பலாத்காரத்தை பற்றி எந்த முகத்தை வைத்து கொண்டு பேசுகிறார் என்பதை நான் கேட்க விரும்புகிறேன்.

 

Categories

Tech |