Categories
அரசியல் மாநில செய்திகள்

வீட்டுல போய் தூங்கல …! நைட் 1மணிக்கு ஸ்டாலின்…. எடப்பாடியை கண்டித்த திமுக …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு எந்த நிவாரணமும் கொடுக்க வில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி சொல்லியிருக்கிறார். இன்றைக்கு நிவாரணங்கள் முழுமையாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது, நிவாரணங்களை கொடுப்பதற்கான சரியான கணக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது, நிவாரண இழப்பீடுகளை வாங்குவதற்கானஅரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே அவற்றதையெல்லாம் சரியான முறையில் எடுத்து அந்த கணக்கீடுகளின்படி வழங்க இருக்கிறோம். அதிமுக  கூட்டணியிலே இருக்கக்கூடிய மத்திய பிஜேபி அரசை வலியுறுத்தி தேசிய  பேரிடர் மேலாண்மை அமைப்பிடம் இருந்து  நிவாரண தொகையை வழங்குவதற்கு, அதிமுகவினர் மத்தியிலே தங்களுடைய செல்வாக்கை பயன்படுத்துவதை விட்டுவிட்டு,  இந்த பிரச்னையை அரசியலாக்க முற்படுவது என்பது கடுமையாக கண்டிக்க கூடியது.

எடப்பாடி மழை வெள்ளத்தை பற்றி  பேசுகின்றார். இவர்கள் ஆட்சி மழை பெய்ததுவந்தபோது எந்த இடத்திற்கு போய்  முதலமைச்சர் நின்றார். நம்முடைய முதலமைச்சர் அவர்கள் மழை வெள்ளத்திலே பாதிக்கப்பட்ட அத்தனை இடங்களுக்கும் போய் நின்றார். திடீரென்று எதிர்பார்க்காத வகையில் அன்றைக்கு சென்னையில் மாமழை கொட்டுகிற போது திருச்சியில் இருந்த முதலமைச்சர் உடனடியாக திரும்பி வந்து வீட்டிற்குப் போய் ஓய்வு எடுத்துக் கொள்ளவில்லை அவர்களை போல… நேரடியாக களத்திற்கு வந்தார்.

இரவு 1 மணி வரை களத்தில் இருந்தார், அந்த பகுதியிலே பார்வையிட்டு அதற்கான நிவாரணங்களை வழங்குவதற்கு உத்தரவிட்டார். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் மழை வெள்ளம் வருகிறபோது, மழை வடிந்ததற்கு பிறகும் கூட மீண்டும் அந்த இடங்களுக்கு சென்று மழை மீண்டும் வந்தால் எந்தவித பிரச்சனையும் வராத அளவிற்கு என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை மழை வடிந்த பிறகும் அந்த இடத்திற்கு சென்று பார்த்த முதலமைச்சர் நம்முடைய முதலமைச்சர் ஸ்டாலின் தான் என புகழாரம் சூட்டினார்.

Categories

Tech |