தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளது. அதன்படி இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதில் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து முழு ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு தேர்வுக்கு செல்வோர், திருமணத்திற்கு செல்வோர், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி சேவைகள், மருந்தகங்கள், மருத்துவமனைகள், மருத்துவத் துறை சார்ந்த பணிகள், தினசரி பத்திரிக்கை வினியோகம், ஏடிஎம் மையங்கள், பெட்ரோல் பங்குகள் ஆகியவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் உணவகங்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.