மிதுன ராசி அன்பர்களே….!! இன்று உறவினர் தந்த உதவிக்கு மறு உபகாரம் செய்வீர்கள். தொழில் வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும்.. புத்திரரின் தேவையை தாராள பணச் செலவில் நிறைவேற்றுவீர்கள். இன்று கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படும் பார்த்துக் கொள்ளுங்கள். வீண் பிரச்சினைகளில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நன்மையை கொடுக்கும்.
உறவினர் நண்பர்களிடம் பழகும்போது கவனமாக இருங்கள். சுபகாரிய பேச்சுக்கள் இன்று நடக்கக் கூடும். திருமண முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். காதல் வயப்பட கூடிய சூழல் இருக்கு. அதையும் கவனத்தில் கொள்ளுங்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். சக மாணவர்களின் ஒத்துழைப்பைபு உங்களுக்கு கிடைக்கும்.
இருந்தாலும் சக மாணவர்களிடம் பேசும் பொழுது மட்டும் கொஞ்சம் வாக்குவாதம் இல்லாமல் பேசுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு எப்போதுமே அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.