செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நாங்கள் ஆட்சிக்கு வந்து நகைக்கடன் தள்ளுபடி செய்ய, சம்மந்தப்பட்டதுறையின் உள்ளே வந்து பாக்கும்போது தான் தெரியுது ? நகைக்கடன் தள்ளுபடி செய்யல என நீங்க இவ்வளவு தூரத்திற்கு சொல்றீங்க, ஆனா வந்து பார்த்தால் இப்படி முறைகேடு பண்ணி வச்சிருக்கீங்களே… இதுக்கு நகைக்கடன் தள்ளுபடி கொடுக்க முடியுமா?
நகை கடன்களை தள்ளுபடி செய்கிறோம் என்று சொல்றோம், உள்ள வந்து பாத்தா நீங்கள் தானே கூட்டுறவு சங்க தேர்தல் நடத்திட்டு உள்ள இருக்கீங்க ? எப்படி நகை கடன்களை கொடுத்துருக்கிங்க, அப்போ ஒரே தனிநபர் 62 பேரில் 1 1/2 கோடி ரூபாய்க்கு வாங்கிட்டு போவாரு, அவருக்கு நாங்கள் கொடுக்க வேண்டும் என்று சொல்ல வாரீங்களா ?
யார் தவறு செய்திருக்கின்றார்களோ அதை சரிபடுத்திவிட்டு தான் மீதி இருக்கக்கூடியவர்களுக்கு, உண்மையாக கஷ்டபடக்கூடியவர்கள் தங்கள் கஷ்டத்திற்காக நியாயமான முறையில் யார் நகையை கடனுக்கு வைத்திருக்கிறார்களோ அவர்களை கண்டறிந்து அவர்களுக்கு நகை கடன் வழங்கப்படும். மழைநீர் வடிகால் வாரிய பணி எப்போது முழுமையாக முடிக்கப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,
அதற்காக முழு வேலைகளை ஆரம்பித்து இருக்கிறோம் மழை வெள்ளம் முடிந்த பிறகு அந்த பணிகள் உடனடியாக துவங்கப்படும். இந்த கேள்வியை மதிப்பிற்குரிய எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் கேட்க வேண்டும், அவர்கள் தான் கடந்த 5 ஆண்டுகளில் எதுவுமே செய்யவில்லை, நாங்க ஆட்சிக்கு வந்து ஐந்து மாதத்திற்கு உள்ளாக தான் முதலமைச்சர் ஒவ்வொரு இடத்திற்கும் வந்திருக்கிறார், பார்த்திருக்கிறார் வேலைகளை முடுக்கிவிட்டிருக்கிறார் என தெரிவித்த்தார்.