Categories
கிரிக்கெட் விளையாட்டு

WI VS IRE ஒருநாள் தொடர் : அயர்லாந்து அணியில் இருவருக்கு கொரோனா உறுதி ….!!!

அயர்லாந்து அணியைச் சேர்ந்த 2 வீரர்களுக்கு  கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 3 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடுகிறது.இதில்  இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஜமைக்காவில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் நேற்று தொடங்கியது .இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்நிலையில் இப்போட்டி தொடங்குவதற்கு முன்பாக வீரர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில் அயர்லாந்து அணி வீரர்கள் சிமி சிங், பென் வைட் ஆகியோருக்கு கொரோனா  தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் இருவரும் போட்டியில் இருந்து விலக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.

Categories

Tech |