தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளது. அதன்படி இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதில் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகரம் முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 312 இடங்களில் வாகன தணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைகள் தவிர வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும். அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோர் உரிய அடையாள அட்டையை காண்பித்து செல்லுமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.