கடக ராசி அன்பர்களே…!! இன்று உங்களின் நல்ல பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் சூழ்நிலை உருவாகலாம். உண்மை, நேர்மை குணம் தவறாமல் பின்பற்றுவது மிகவும் நல்ல பலனைக் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். அளவான பணவரவு தான் இன்று கிடைக்கும். சீரான ஓய்வு உடல் நலத்தை பாதுகாக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு வேகம் இல்லாவிட்டாலும் ஓரளவு நன்மையைத் பெறக்கூடும்.
பணவரவு தாமதப்பட்டு தான் வந்து சேரும். ஆர்டர்கள் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். குழப்பங்கள் நீங்கி மனம் மட்டும் தெளிவு உண்டாகும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். குடும்பத்தாரிடம் எந்தவித வாக்குவாதங்களும் இன்று செய்ய வேண்டாம். பொறுமையை மட்டும் கடைபிடியுங்கள் அது போதும். இன்று மாணவர்கள் கல்வியில் கொஞ்சம் கஷ்டப்பட்டு பாடங்களைப் படியுங்கள்.
படித்த பாடத்தை கொஞ்சம் நினைவில் வைத்துக்கொள்வதற்கு எழுதியும் பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : மேற்கு