தமிழகத்தில் நேற்று சுமார் 30 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இது தமிழ்நாடு காவல்துறையில் உளவுத்துறை ஐஜியாக ஆசியம்மாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தமிழ்நாடு காவல்துறையில் மிகப்பெரிய சாதனையாக பேசப்படுகிறது.
தமிழ்நாடு உளவுத் துறையில் முதல் முறையாக பெண் ஒருவர் ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது பெண் இனத்திற்கே பெருமை சேர்க்கக்கூடிய ஒன்றாகும். நேர்மையான அதிகாரி என பெயர் பெற்ற இவரின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கொங்கராயகுறிச்சி ஆகும். மகாபலிபுரம் டிஎஸ்பி, திருவொற்றியூர் சட்டம்-ஒழுங்கு உதவி ஆணையராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.