தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளது. அதன்படி இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதில் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளையுடன் முடியும் நிலையில் மருத்துவத்துறை அதிகாரிகள் நாளை ஆலோசனை நடத்தவுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவத் துறை செயலர், பொது சுகாதாரத்துறை இயக்குனர், மருத்துவ கல்வி இயக்குனர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். நாளை இரவு இது பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.