Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு…”நிம்மதியாக தூக்கம் வரும்”…. மாமன் மைத்துனன் உதவி..!!

சிம்ம ராசி அன்பர்களே…!! இன்று திறமையுடன் செயல்படுவதால் பணி நிறைவேறும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். குறைந்த அளவில் பணவரவு தான் கிடைக்கும். மாமன் மைத்துனன் உதவிகரமாக நடந்து கொள்வார்கள். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். இன்று கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தூக்கம் வராமல் தவித்த இரவுகள் மாறி நிம்மதியாக தூக்கம் வரக் கூடும்.

தொழில் தொடர்பாக எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள், முடிந்தால் ஆலோசனை கேட்டு செய்வது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் போன்றவை ஏற்படக்கூடும். இன்று கூடுமானவரை உழைப்பு கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று குடும்பத்தை பொறுத்த வரை எந்தவித எந்த பிரச்சினையும் இல்லை. ஒற்றுமை வலுப்படும்.

இன்று முக்கியமான காரியங்களை நீங்கள் செய்யும் பொழுது, மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்களின் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் :  4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |