நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் உச்சம் தொட தொடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநில அரசுகள் தேவைப்பட்டால் ஊரடங்கு அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இமாச்சல பிரதேச முதல்வர் மருத்துவ மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் மாநாடு நடைபெற்றது.
அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வருகின்ற ஜனவரி 26-ஆம் தேதி வரை மூட உத்தரவிட்டு உள்ளார். மேலும் கொரோனா பரிசோதனை கண்காணிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்த வேண்டும். அதுமட்டுமில்லாமல் சுற்றுலாபயணிகள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுகிறார்களா என்பதையும், தண்ணீர் மற்றும் மின்சார காரணமாக எந்த ஒரு சிரமமும் இல்லை என்பதையும் சரிபார்க்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தை முதல்வர் கேட்டுக்கொண்டார்.