Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. ஜனவரி 26-ஆம் தேதிக்கு முன்….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 18 மாதங்களாக அகவிலைப்படி நிலுவை தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தொகை கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த செயல் முறைகள் அனைத்தும் மீண்டும் தாமதமாகி இருக்கும் நிலையில் DA நிலுவை தொகை இந்த மாதம் 26 ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 18 மாதங்களாக நிலுவையில் உள்ள மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி தொகை 2022 ஜனவரி மாதத்தில் விடுவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு ரூ.2 லட்சம் வரை DA தொகை கிடைக்க வாய்ப்புள்ளது.

இப்போது அகவிலைப்படி 3% அதிகரிப்பு ஏற்பட்டால் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒட்டுமொத்த DA தொகை 34% ஆக இருக்கும். அதாவது மாதம் ரூ.18000 சம்பளம் வாங்கும் மத்திய அரசு ஊழியர் ஆண்டுக்கு 73,440 அகவிலைப்படியை பெறுவார்கள். இந்த தொகை வழங்குவது குறித்து மத்திய அமைச்சரவை அடுத்த கட்டத்தில் முடிவு எடுக்க உள்ளது என்று பல்வேறு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த மதிப்பீடுகளின் படி, லெவல் 1 ஊழியர்களுக்கான நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை வழங்கப்படும் என்றும் லெவல் 13 ஊழியர்களுக்கு 1,40,200 முதல் 2,18,200 வரை DA தொகை வழங்கப்படும் என்றும் கணிக்கப்படுகிறது.

Categories

Tech |