அண்மையில் கேரளாவில் மாணவர்களிடையே பாலின பாகுபாட்டை கலையும் வகையில் இரு பாலின மாணவர்களுக்கும் பொதுவான சீருடை அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
இதையடுத்து தற்போது அதே மாநிலத்தில் ஆசிரியர்களை சார் அல்லது மேடம் என அழைக்கக் கூடாது என பாலக்காட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று அறிவித்துள்ளது, அந்தவகையில், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளி, மாணவர்களிடத்தில் இரு பாலின ஆசிரியர்களையும் பொதுவாக டீச்சர் என்றே அழைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
300 மாணவர்கள் பயின்று வரும் அந்த பள்ளியில் 8 ஆண் ஆசிரியர்களும், 9 பெண் ஆசிரியைகளும், பணியாற்றி வருகிறார்கள். ஆசிரியர்களை மாணவர்கள் அழைக்கும் விதத்திலும், பாலின சமத்துவத்தை பேணும் வகையில் நடவடிக்கை எடுத்த பள்ளி நிர்வாகத்தின் செயலுக்கு பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.