தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளது. அதன்படி இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதில் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி முதல்வர் முடிவு எடுப்பார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பொருளாதார பாதிப்பு மற்றும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார். மேலும் அறிகுறிகள் ஏதும் இருந்தால் மக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.