Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்…. மிஸ்டு கால் வழியாக மிஸ் யூஸ்…. ஃபாரினில் வேலை செய்வோரின் மனைவிகளே டார்கெட்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம் பகுதியில் அப்துல் சலாம்(32), அஷ்ரப்(36) வசித்து வருகிறார்கள். மேலும் வாடா நாப்பள்ளி பகுதியில் ரபீக்(31) என்பவர் வசித்துவருகிறார். இவர்கள் மூவரும் வெளிநாட்டில் வேலைபார்ப்பவர்களின் இளம் மனைவிகளின் செல்போனுக்கு மிஸ்டு கால் கொடுத்து நண்பர்களாக பழகி வருகின்றனர். அப்போது தங்களை மருத்துவர்கள், பட்டதாரிகள் என்று அறிமுகம் செய்து, அவர்களது நண்பர்களையும் உறவினர்கள் என்று கூறி அந்த பெண்ணிடம் அறிமுகம் செய்கிறார்கள். இந்த நட்பு படிப்படியாக வளர்ந்த பிறகு பெண்களிடம் கடனாகப் பணம் மற்றும் நகைகளை வாங்கிக் கொள்கிறார்கள். அதன்பிறகு கொடுத்த பணம் மற்றும் நகை  அந்த பெண்கள் திருப்பிக் கேட்கும் போது தங்களுடன் ரகசியமாக பேசியதை சமூகவலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டிகின்றனர்.

இதனால் அச்சம் அடைந்து அந்த பெண்கள் காசு போனால் போகட்டும் என்று அமைதியாகிவிடுகிறார். இதனை இந்த மூவரும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பல பெண்களிடம் இந்த வித்தையை கையாண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு பெண்ணைத் தொடர்புகொண்டு இந்த வித்தையை பயன்படுத்தியுள்ளனர். இவர்கள் மீது சந்தேகம் அடைந்த அந்த பெண் கைப்பமங்கலம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் அந்த மூவரையும் பிடித்து விசாரணை செய்த போது, பல மோசடிகள் இவர்கள் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |