பாகிஸ்தானிலுள்ள பலுசிஸ்தான் உட்பட 3 மாநிலங்களில் கடந்த 2 தினங்களாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது.
பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் சூழ்நிலையில் அந்நாட்டிலுள்ள பலுசிஸ்தான் உட்பட 3 மாநிலங்களில் கடந்த 2 தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்த கனமழையால் பலுசிஸ்தான் உட்பட 3 மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கினால் 3 மாநிலத்திலுள்ள 100-க்கும் மேலான கிராமங்களிலிருக்கும் வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில் அங்கு வெள்ளப்பெருக்கின் காரணமாக பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வெள்ள நீரில் சிக்கி குழந்தைகள் உட்பட 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.