கிணற்றில் விழுந்த பசுமாட்டை தீயணைப்புத்துறையினர் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்பு பத்திரமாக மீட்டனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள குட்லாடம்பட்டி பகுதியில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோசலை என்ற மனைவி உள்ளார். இவர் தனது வீட்டில் சொந்தமாக பசுமாடு ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் பசுமாடு அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது.
அப்போது பசுமாடு தடுப்புச்சுவர் இல்லாத 50 அடி ஆழ கிணற்றில் எதிர்பாராதவிதமாக விழுந்தது. இதனைப் பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் மாட்டை கயிறு கட்டி 2 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு பத்திரமாக மீட்டனர்.