அடிக்கடி ஏற்பட்ட குடும்ப தகராறில் மனமுடைந்த கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்துள்ள ஆயில்பட்டி ஒண்டிக்கடை பகுதியில் ஜெயபால் என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டிட தொழிலாளியான இவருக்கு கண்ணகி என்ற மனைவியும், சச்சின் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் ஜெயபாலுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மிகவும் மன உளைச்சலில் இருந்த ஜெயபால் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஆயில்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் ஜெயபாலின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.