Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஏன் குடிச்சிட்டு வந்த … இரவு முழுவதும் பிணத்துடன் உறங்கிய மகன் …!!

குடிப்பழக்கத்தை கண்டித்த பெரியப்பாவை கட்டையால் அடித்துக் கொலை செய்து இளைஞர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

தேனியில் ,சமதர்ம புரத்தைச் சேர்ந்த கனகவேல் ஐயப்பன் என்ற அந்த இளைஞர் நேற்று இரவு  குடிபோதையில் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அவரது பெரியப்பா பெத்தணசாமி கண்டித்துள்ளார்.இதனால்  ஆத்திரமடைந்த கனகவேல் ஐயப்பன் உருட்டு கட்டையை எடுத்து பெத்தணசாமியின் தலையில் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இந்நிலையில் பெத்தணசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் .அவர் உயிரிழந்ததைக்  கூட தெரியாமல் இரவு முழுவதும் அவர்  உடலுக்கு பக்கத்திலேயே படுத்துறங்கிய கனகவேல் ஐயப்பன் காலையில்  போதை தெளிந்தவுடன் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.

Categories

Tech |