ஆந்திரா மாநில அரசு துறை அலுவலகங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 60 ஆக உயர்த்தி முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆணையிட்டுள்ளார். இது மட்டுமல்லாமல் மாநில அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை ஆணையத்தின் படி அடிப்படை ஊதியம் தற்போது 23 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் அனைத்தும் ஜனவரி 1 2020 இரண்டாம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக ஆந்திர மாநில அரசுத்துறை ஊழியர் சங்கத்தினர் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஆந்திரா மாநில அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் 23 சதவீதமாக உயர்த்தப்படும் அதேபோன்று ஊழியர்களுக்கான ஓய்வு வயது 60 லிருந்து 62 ஆக உயர்த்தப்படுகிறது இவை அனைத்தும் ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பானது மாநில அரசுத் துறையில் உள்ள லட்சக்கணக்கான அதிகாரிகள் துவங்கி கடைநிலை ஊழியர்களின் சம்பள விகிதம் ஓய்வு ஊதியம் ஓய்வு வயது பற்றிய முதன்மை செயலாளர் கபீர் சர்மா நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசின் இந்த முடிவால் 10 247 கோடி செலவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேடத்தில் இந்த அறிவிப்பு லட்சக்கணக்கான அரசு ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.