Categories
மாநில செய்திகள்

கொரோனா எங்கேயும் போகாது…. நம்முடனே பயணிக்கும்…. WHO தலைமை விஞ்ஞானி எச்சரிக்கை….!!!!

சென்னை திருவான்மியூரில் அறக்கட்டளை சார்பில் ஊட்டச்சத்து தாவர விழிப்புணர்வு தோட்டம் அமைக்கப்பட்டது. இதனை உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் திறந்து வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா போன்ற வைரஸ்கள் கடைசி வரை நம்முடன் பயணிக்கும். கொரோனா மூன்றாவது அலையை கடக்க காற்றோட்டம் இல்லாத இடம் மற்றும் கூட்டம் கூடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஒமைக்ரான் போன்ற வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து புரிதல் ஏற்பட்டுள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தேவை இல்லை.

மேலும் ஒமைக்ரான் வைரஸ் தீவிரத்தன்மை குறைவாக இருக்கிறது. ஆனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே மக்கள் அனைவரும் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும். அதனை தொடர்ந்து வயது முதிர்ந்தோர் மற்றும் இணை நோய் பாதிப்பு இருப்பவர்கள் கட்டாயமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். இனிவரும் நாட்களில் கொரோனா போன்ற வைரஸ்கள் மாறுபாடு ஏற்பட்டு புதிய வகை தொற்றாக மாற வாய்ப்புள்ளது என்று அவர் எச்சரித்துள்ளார். மேலும் தமிழக அரசு கொண்டு வந்த “மக்கள் தேடி மருத்துவம்” திட்டத்திற்கு பாராட்டு தெரிவித்தார்.

Categories

Tech |