தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தங்களை வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொள்ளலாம் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து வீட்டு தனிமையில் உள்ளவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
தனி கழிவறை உடன் கூடிய காற்றோட்டமுள்ள தனியறையில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
வீட்டில் உள்ளவர்கள் உங்கள் அறைக்குள் நுழையக் கூடாது.
சத்தான உணவை சாப்பிடுங்கள், மற்றவர்களுடன் தொடர்பு இல்லாதவாறு உணவை பெற்றுக் கொள்ளுங்கள். போதுமான அளவு தண்ணீர், பழரசம் குடிக்கவும.
பிறரிடம் பேசுவதை தவிர்த்து விடுங்கள், மீறி தொடர்புகொள்ள நேரிட்டால் சர்ஜிக்கல் அல்லது N95 முக கவசம் அணிந்து பேசுங்கள்.
அடிக்கடி சோப்பு உபயோகித்து குறைந்தது 20 நொடிகள் நன்கு தேய்த்து கைகளை கழுவுங்கள் அல்லது ஆல்கஹால் கலந்த கிருமி நாசினி பயன்படுத்துங்கள்.
மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மட்டும் சரியான நேரத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் துணிகள் மற்றும் பாத்திரங்களை நீங்களே சுத்தம் செய்யுங்கள்.
பொருட்களை மற்றவர்களும் பகிர கூடாது கழிவுகளை தனி பையில் சேகரித்து அப்புறப்படுத்தவும் .
பல்ஸ் ஆக்சிமீட்டரின் மூலம் ஆக்சிஜன் அளவையும், அபாய அறிகுறியும் கண்காணியுங்கள்.