Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“ரொம்ப நாளா தண்ணீர் வரல” போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

குடிநீர் சரியாக வினியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நடராஜபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர் சீராக வினியோகம் செய்யப்படாததை கண்டித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மறியலில் ஈடுபட்ட பெண்கள் நடராஜபுரம் 9 தெருக்களில் உள்ள வீடுகளுக்கும் மற்றும் பொது குழாய்களுக்கும் பல மாதங்களாக குடிநீர் சீராக விநியோகம் செய்யப்படவில்லை. இதனை சரி செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றனர். இதற்கு அதிகாரிகள் நடராஜபுரம் பகுதியிலுள்ள அனைத்து தெருக்களுக்கும் குடிநீர் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பின் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |