தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தங்ககளுடைய விவாகரத்தை அறிவித்தனர். திருமணத்திற்கு பின்னரும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். அண்மையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் பாடல் ஒன்றுக்கு நடனமாடி இருந்தார்.
இந்தப்பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில் சமந்தா, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் தனது பயிற்சியாளரின் உதவியுடன் ஹெவிவெயிட் லைட்டை தூக்கும் ஒர்க்அவுட் வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவிற்கு, “தாழ்ந்து போ அல்லது வீட்டிற்குச் செல்லுங்கள், எனது படிவத்தை சரிசெய்கிறேன்” என்று தலைப்பிட்டுள்ளார். அவரின் இந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.