உலக சுகாதார மையம் ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்படும் விதிமுறைகளை அரசாங்கம் கண்டிப்புடன் விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது.
உலக நாடுகளிலும் ஒமிக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது, இந்நிலையில் உலக சுகாதார மையத்தின், தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திற்கான இயக்குனராக இருக்கும் பூனம் கேத்ரபால் சிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் ஒமிக்ரான் வைரஸின் பாதிப்பு குறைவாகத் தான் இருக்கிறது.
எனினும் மக்கள் அதற்காக அலட்சியமாக இருக்கக்கூடாது. பல நாடுகளில் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. பரவல் அதிகம் இருக்கும் இடங்களில் தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் விரைவாக மேற்கொள்ள வேண்டும். விதிமுறைகளை மக்கள் சரியாக பின்பற்ற வேண்டும்.
கூட்டம் இருக்கும் இடங்களுக்கு செல்வது மற்றும் பொது வெளிகளில் கூட்டமாக கூடுவது போன்றவற்றை மக்கள் தவிர்ப்பது அவசியம். தடுப்பூசி செலுத்தும் திட்டங்கள் விரைவாக மேற்கொள்ளப்படவேண்டும். மக்கள், 3 தவணை தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டாலும் கட்டுப்பாடு நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.