நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் அமித்ஷா, மன்சுக் மாண்டவியா, உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் நாடு முழுவதும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது, மருத்துவ கட்டமைப்புகளை தயார்படுத்துவது, தடுப்பூசி போடும் பணிகள், கடும் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு ஊரடங்கு குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Categories