Categories
மாநில செய்திகள்

உஷார்….. வங்கி வாடிக்கையாளர்களே….!! நூதன முறையில் ஏடிஎம்மில் பணம் திருடும் கும்பல்….!!

வங்கி ஏடிஎம்களில் பணத்தை நூதன முறையில் திருடும் ஒரு கும்பல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. வங்கி ஏடிஎம்களுக்கு செல்லும் வாடிக்கையாளர்களை பின் தொடரும் இந்த கும்பல் அவர்களுக்கு உதவி செய்வது போன்று நடித்து அல்லது அவர்களின் கவனத்தை திசைதிருப்பி வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை ஏமாற்றிப் பறித்துச் செல்கிறார்கள் இந்த கும்பல் .

குறிப்பாக இந்த கும்பல் பெரும்பாலும் ஏடிஎம்களில் பணம் எடுக்க தெரியாமல் திணறும் முதியவர்களை குறி வைக்கிறது. எனவே வாடிக்கையாளர்கள் தங்கள் ஏடிஎம்களில் பணம் எடுப்பது மற்றும் போடுவது போன்ற செயல்களை தாங்களே சுயமாக செய்ய வேண்டும். அப்படி செய்யமுடியாத பட்சத்தில் வீட்டில் இருப்பவர்களை உதவிக்கு அழைத்து வரவேண்டும் எனவும் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் வங்கி அறிவித்துள்ளது.

Categories

Tech |