Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

புகார் பெட்டியில் போடலாம்…. கூட்டம் ஒத்திவைப்பு…. ஆட்சியரின் தகவல்….!!

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை தடுக்க பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறியதாவது, கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்கள் கூடுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதர குறைதீர்க்கும் கூட்டங்கள் மற்றும் மனு பெரும் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதனால் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக நேரடியாக கலெக்டர் அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும், தங்கள் அத்தியாவசிய கோரிக்கைகளை மனுவாக தயார் செய்து கலெக்டர் அலுவலகம் மற்றும் கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் மனுக்களை போடலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து இந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதி அடிப்படையில் கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து கொரோனா தடுப்பு பணியில் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |