சுமார் 20 வருடங்களாக தொடர்ந்து பல மொழிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகர் மாதவன் எப்போதும் சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார். மேலும் சமூக வலைதளங்களின் மூலம் ரசிகர்களிடையே உரையாற்றுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் நடிகர் மாதவன் சமூக வலைதளத்தில் தற்போது ரசிகர்களுடன் உரையாடியது பயங்கர வைரலாகி வருகிறது.
Try Uncle kid . Don’t want your dad to get offended . ❤️❤️🙏🙏😄😄😂 https://t.co/GwDHiLVB9b
— Ranganathan Madhavan (@ActorMadhavan) January 8, 2022
அதிலும் குறிப்பாக மாதவனிடம் ரசிகை ஒருவர் “நான் உங்களை அப்பா என்று கூப்பிடலாமா ?” என்று கேட்டு பாச மழையை பொழிந்துள்ளார். அதற்கு நகைச்சுவையாக பதிலளித்த மாதவன் “என்னை அப்பா என்று கூப்பிட்டால் உன்னுடைய அப்பா புண்படுவார். எனவே நீ என்னை அங்கிள் என கூப்பிட ட்ரை பண்ணு” என்று கூறியுள்ளார்.