Categories
அரசியல்

27 சதவீத இடஒதுக்கீடு…. ‘அத நீங்க கொண்டாடுவது கேலிக்கூத்தா இருக்கு’…. ஓபிஎஸ்-ஈபிஎஸ் கண்டனம்….!!!

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இருவரும் 27% இட ஒதுக்கீடு தீர்ப்பை தி.மு.க கொண்டாடுவ து கேலியாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்கள்.

அ.தி.மு.க வின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் நேற்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மருத்துவ பட்ட படிப்புகளுக்கு இந்தியாவிற்கான ஒதுக்கீட்டில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட 27% இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம்  தீர்ப்பளித்திருக்கிறது.

இதனால், அ.தி.மு.க.வின் தீவிர போராட்டத்திற்கு வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த தீர்ப்பிற்கு  அ.தி.மு.க.வின் தொடர் வலியுறுத்தல் தான் முக்கிய காரணம். இது, அ.தி.மு.க.வின் தொடர்ச்சியான போராட்டத்திற்கும், வலியுறுத்தலுக்கும் கிடைத்திருக்கும் வெற்றியாகும்.

ஏறக்குறைய 17 வருட காலமாக மத்திய அரசில் இருந்து, இதற்காக சிறிதும் குரல் எழுப்பாமல் இருந்த தி.மு.க, இந்த ஆணைக்காக சிறிய துரும்பையும் கிள்ளிப் போடாமல் இருந்த தி.மு.க, வாயை மூடிக்கொண்டு இருந்த தி.மு.க, அவர்கள் சுயநலத்திற்காக பொது நலத்தை விட்டுக்கொடுத்த தி.மு.க, அதிமுகவின் அதிக போராட்டத்திற்காக கிடைத்திருக்கும் வெற்றியை தங்களின் வெற்றியாக கொண்டாடிக்கொள்வது கேலிக்கூத்தாக இருக்கிறது” என்று கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |