Categories
அரசியல் மாநில செய்திகள்

நீட் தேர்வில் பிரச்சனை இருந்தது உண்மைதான்.. ஆனால் இப்போ.. வானதி சீனிவாசன் ஆவேசம்

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எதிராக நீட் இருப்பதாக தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள், 2006-ல் தமிழகத்தில் அனைத்து ப்ரொபஷனல் காலேஜுக்கும் நுழைவு தேர்வை ஸ்கிரப் பண்ணினதுக்கு அப்புறம், 2007 இலிருந்து 2017 வரை…. நீட் தேர்வு இங்கு அமல்படுத்துவது வரை ஒவ்வொரு வருடமும் அரசு பள்ளி மாணவர்கள் 30 லிருந்து 40 பேருக்கு தான் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து இருக்கிறது.

1 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்களே சேர்ந்து இருக்கிறார்கள். ஆனால் இதற்கு முன்பாக தமிழகத்தை ஆட்சி செய்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அரசு, அப்போதைய முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எடுத்த ஒரு முக்கிய முயற்சியின் காரணமாக 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை  அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுத்ததன் காரணமாக, இப்ப இருக்கிற கூடுதல் சீட், புதிதாக  17 மருத்துவ கல்லூரிகள் தமிழ்நாட்டிற்கு வருது. இதனால் கிட்டத்தட்ட மூன்று மடங்கு மருத்துவ இடங்கள் தமிழகத்திற்கு அதிகமாக கிடைக்கிறது.

ஆனால் ஏற்கனவே இருக்கின்ற இடங்களில் கூட 220க்கும் மேற்பட்ட குழந்தைகளை அரசுப்பள்ளியில் படித்த மாணவர்கள் நீட் தேர்வினால் இந்த இட ஒதுக்கீட்டை பெற்று அரசு மருத்துவ கல்லூரிக்கு வந்துள்ளனர். ஆக கிராமப்புற ஏழை அரசு பள்ளி மாணவர்களுடைய நலனை 7.5 சதவீத இட ஒதுக்கீடு பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. இதன் வாயிலாக 12 சதவீத மருத்துவ இடங்களை தமிழகம் பெறப்போகிறது. ஒட்டுமொத்தமாக நாட்டில் இருக்கின்ற மெடிக்கல் சீட்டில் 12% தமிழ்நாட்டில் மட்டும் கிடைக்கப் போகிறது.இந்த 12 சதவிகிதத்தில், 7.5% அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்தால் அதனுடைய எண்ணிக்கை கணிசமாக உயரும். ஆக இது இங்கு தொடர்ச்சியாக நடைபெறவேண்டும்.

ஆரம்ப காலகட்டத்தில் நீட்தேர்வு அமல்படுத்தப்பட்ட போது ஒரு சில பிரச்சினைகள் இருந்ததை நாங்கள் மறுக்கவில்லை, இதை பல்வேறு முறை சொல்லிருக்கோம். அங்கு நுழைவுத் தேர்வு ஹிந்தி, ஆங்கிலம் என்ற இரண்டு மொழிகளில் நடைபெற்றது. ஆனால் இப்போது 10 க்கு மேற்பட்ட மாநில மொழிகளில், அந்தக் குழந்தைகள் தங்கள் தாய்மொழியிலேயே பரீட்சை எழுதுகின்ற காரணத்தினால் நீட் தேர்விலே அதிகமாக அந்தந்த மாநில மொழிகளில் எழுதுகின்ற மாணவர்கள் தேர்ச்சி பெற்று கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |