Categories
கிரிக்கெட் விளையாட்டு

NZ VS BAN :ஒரே பந்தில் 7 ரன் எடுத்த நியூஸிலாந்து ….எப்படி தெரியுமா….? வைரல் வீடியோ ….!!!

நியூசிலாந்து- வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் மைதானத்தில் இன்று தொடங்கியது.

நியூசிலாந்து- வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்  நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான  2-வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சு  தேர்வு செய்தது. இந்நிலையில் இப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு ஒரே பந்தில் கிடைத்துள்ளது .இதில் முதல் நாள் உணவு இடைவேளை முடிந்தவுடன் போடப்பட்ட முதல் ஓவரில் இச்சம்பவம் நடந்துள்ளது.

அப்போது நியூசிலாந்து அணியில் வில் யங் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, பந்து பேட்டில் பட்டு முதல் ஸ்லிப்பிற்கு சென்ற பந்தை தவறவிட்ட கையில் பந்து பவுண்டரி சென்றது. அப்போது வங்காளதேச வீரர்  பவுண்டரியை தடுத்து பந்தை நேராக விக்கெட் கீப்பரிடம் வீசினார். அதற்குள் நியூசிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் 3 ரன்கள் எடுத்துவிட்டனர். இதில் ரன் அவுட் செய்யும் முயற்சியில் விக்கெட் கீப்பர் பந்தை தூக்கி எறிய மீண்டும் பந்து  பவுண்டரிக்கே சென்றது. இதனால் நியூசிலாந்து அணிக்கு  ஒரே பந்தில் 7  ரன்கள் கிடைத்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |