துலாம் ராசி அன்பர்களே…!! இன்று அனைவரையும் கவரும் விதம் விதமாக பேசுவீர்கள். உற்பத்தி விற்பனை இலக்கு குறித்த காலத்தில் பூர்த்தியாகும். உபரி பணவரவு கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். மேலிடத்திலிருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி, ஒற்றுமை உண்டாகும்.
எடுத்திருக்கும் அரசாங்க வேலைகள் மூலம் நன்மை உண்டாகும். அனைவரின் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் இன்று கலகலப்பான சூழல் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் ஏற்படும். இன்று அக்கம் பக்கத்தினர் இடம் நீங்கள் அன்பு பாராட்டுவீர்கள். அதேபோல கொடுக்கல் வாங்கல் விஷயங்களும் ரொம்ப சிறப்பாகவே இருக்கும். தன வரவு தாராளமாக இருக்கும். முடிந்தால் சேமிக்கக்கூடிய எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எந்தவித பிரச்சினையும் இல்லை.
சிறப்பான முன்னேற்றம் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு