கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை புறநகர் ரயில்களில் நாளை முதல் 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும், தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயில் நிலையத்திலும், ரயில் செல்லும் போதும், சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல் போன்ற அனைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாறாக ரயில் நிலையத்தில் அல்லது பயணம் செய்யும்போது முகக் கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் இந்த மாதம் 31-ஆம் தேதி முதல் அமலில் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பயனாளிகள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை காட்டினால் மட்டுமே பயணச் சீட்டு வழங்கப்படும் எனவும், 2 டோஸ் செலுத்தாதவர்களுக்கு வரும் திங்கட்கிழமை முதல் புறநகர் மின் ரயிலில் பயணிக்க அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் UTS செயலி மூலம் முன்பதிவு செய்யும் வசதி நாளை முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. தொடர்ந்து ரயில் நிலையங்களில் மற்றும் பயணத்தின் போது உங்களின் முறையான ஆவணங்களைச் சரிபார்ப்பது ரயில்வே ஊழியர்களுடன் பயணிகள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.