பீட்ரூட் பொரியல்
தேவையான பொருட்கள் :
பீட்ரூட்- கால் கிலோ
பச்சை மிளகாய் -2
பெரிய வெங்காயம்- 1
தேங்காய் துருவல்-அரை கப்
கொத்தமல்லித் தழை -1 கைப்பிடி அளவு
உப்பு -தேவைக்கேற்ப
தாளிக்க
எண்ணெய் – தேவைக்கேற்ப
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்
கடலைப்பருப்பு – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
செய்முறை :
பீட்ரூட்டை தோல் நீக்கி சுத்தம் செய்து துருவிக் கொள்ளவும். தேங்காயை தனியே துருவிக் கொள்ளவும்.பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக பிளந்து கொள்ளவும்.அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்துக் கொள்ளவும்.பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து துருவிய பீட்ரூட்டை சேர்த்து நன்கு வதக்கவும். அதில் உப்பு சேர்த்து வதக்கியப் பிறகு தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.பிறகு தேங்காய் துருவல் சேர்த்து லேசாக கிளற வேண்டும். பிறகு கொத்தமல்லி தழையை தூவி இறக்கிவைக்கவும். இப்பொழுது சுவையான பீட்ரூட் பொரியல் ரெடி.இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இது சாதம் மற்றும் சாம்பாருடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
இப்பொது சுவையான பீட்ரூட் பொரியல் ரெடி