Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குழந்தைகளை கவரும் வகையில்…. அங்கன்வாடி மையம்…. ஊராட்சி தலைவருக்கு பாராட்டு….!!

9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை பேருந்து நிலையம் அருகே சுமார் 9 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு வருகிறது. அந்த அங்கன்வாடி மையம் குழந்தைகளை எளிதில் கவரும் வகையில் வண்ண ஓவியங்கள், விளையாட்டு உபகரணங்கள் கொண்ட வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும் அங்கன்வாடி மைய வளாகத்தில் பூந்தோட்டம், காய்கறி தோட்டம், மூலிகைச்செடி தோட்டமும் அமைத்துள்ளனர். இந்நிலையில் இந்த வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

அப்போது இத்தகைய அருமையான முயற்சியை மேற்கொண்ட திருவாடானை ஊராட்சி மன்ற தலைவர் இலக்கியா ராமுவை நேரில் சந்தித்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதனையடுத்து திருவாடானை பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பறை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதேபோல் பாண்டுகுடி, தினையத்தூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று அங்கே கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேவுகப்பெருமாள், பாண்டி, ஒன்றிய பொறியாளர்கள் பாலகுமார் வேதவள்ளி, ஜெயந்தி மற்றும் அரசு அதிகாரிகள் பலரும் உடன் இருந்துள்ளனர்.+

Categories

Tech |