வீட்டு உபயோகப் பொருட்களின் விலை மார்ச் மாதத்திற்குப் பிறகு அதிகரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்ளீட்டுப் பொருட்களின் விலை உயர்வு, போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் வீட்டு உபயோக பொருட்களின் விலை உயர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே புத்தாண்டு தொடங்கியதும் ஏசி, ஃப்ரிட்ஜ் விலை உயர்ந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து இம்மாதத்தின் இறுதிக்குள் அல்லது மார்ச் மாதத்திற்குள் டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி போன்ற வீட்டு உபயோகப் பொருட்களின் விலை மேலும் 5 முதல் 10 ரவி தான் உயரும் என தயாரிப்பு நிறுவனங்கள் கூறியுள்ளன.
ஏற்கனவே Panasonic, LG, Haier ஆகிய நிறுவனங்கள் தங்கள் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுவிட்டன. Sony, Hitachi, Godrej ஆகிய நிறுவனங்கள் மார்ச் மாத இறுதிக்குள் விலை உயர்வு குறித்து அறிவிப்பு வெளியிடவுள்ளன. வீட்டு உபயோக பொருட்களின் விலை மார்ச் மாத இறுதிக்குள் குறைந்தபட்சம் 5 முதல் 7 சதவீதம் உயரும் என நுகர்வோர் மின்னணு மற்றும் வீட்டு உபயோகப் பொருள் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.