ஆன்லைனில் பணம் கட்டி விளையாட கூடாது என மாணவர்களுக்கு இன்ஸ்பெக்டர் எம்.பிரேமா விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது சைபர் கிரைம் காவல்துறை இன்ஸ்பெக்டர் எம். பிரேமா கூறியதாவது, தற்போது கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற காரணத்தினால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றது.
இதில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் போது தேவையற்ற நோட்டிபிகேஷன் வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இதனை அடுத்து அனைவரும் பயன்படுத்தும் மொபைல் மூலம் ஏ.டி.எம் கார்டு எண்ணை வங்கியிலிருந்து மேலாளர் பேசுவதாக கூறி பொதுமக்களை அடையாளம் தெரியாத நபர்கள் ஏமாற்றுவார்கள் என அவர் கூறியுள்ளார். பின்னர் சமூக வலைதளங்களில் ஆஃபர் மூலம் பொருட்கள் கொடுத்து ஏமாற்றுவது மற்றும் ஆன்லைன் மூலம் பணம் கட்டி விளையாடுவதன் மூலம் பண இழப்பு ஏற்படுவது.
இதனை அடுத்து ஏ.டி.எம்மில் பணம் எடுக்கும் போது முன் பின் தெரியாத நபரிடம் ஏ.டி.எம் கார்டு கொடுத்தால் டூப்ளிகேட் கார்டை நம்மிடம் கொடுத்து ஏ.டி.எம் கார்டில் பணம் எடுத்து ஏமாற்றி விடுவார்கள். இதனைத் தொடர்ந்து இது போன்று ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக நீங்கள் சைபர் கிரைம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து பாதிப்பை தவிர்க்கலாம். எனவே பள்ளி மாணவர்கள் தங்களுடைய உறவினர்கள் பெற்றோர்கள் என அனைவருக்கும் இது போன்ற விழிப்புணர்வு நீங்களும் தெரிவித்தும் பாதிப்பை தவிர்க்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.