Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கண்டிப்பா வாங்கியே ஆகணும்” அலட்சியமாக செயல்பட்ட பொதுமக்கள்…. அலைமோதிய கூட்டம்….!!

மீன் வாங்குவதற்காக கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மறந்து செயல்பட்ட பொதுமக்களால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உருமாறிய ஒமைக்ரான் மற்றும் கொரனோ தோற்று பரவலைத் கட்டுப்படுத்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் வழிபாட்டுத்தலங்கள் மூடுவது, ஹோட்டல்கள், பேருந்துகள், தியேட்டர், கடைகள் ஆகிய இடங்களில் 50% பொதுமக்கள் அனுமதிக்க வேண்டும். இதில் இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் தமிழக அரசு விதித்துள்ளது.

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒருவருக்கு மட்டும் கொரோனா இருந்து வந்த நிலையில் தற்போது 38 நபர்களுக்கு தொற்று பரவியுள்ளது. ஆதலால் தற்போது சுகாதாரத் துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பின்னர் தற்போது முழு ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும் தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் பொதுமக்கள் கடலூர் துறைமுகத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் திரண்டு போட்டி போட்டுக்கொண்டு மீன் வாங்கி சென்றுள்ளனர்.

இவற்றில் முன்பு இருந்தது போல் முககவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் எந்த வித அரசு கட்டுப்பாடுகளையும் பின்பற்றாமல் வழக்கம் போல் பொதுமக்கள் செயல்பட்டதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் மீன் வாங்குவதில் ஆர்வம் அதிகமாக இருந்ததால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தங்கள் போக்கில் இருந்து மாறாமல் அலட்சியமாக இருந்துள்ளனர்.

Categories

Tech |