அடுத்த மாதம் சீனாவின் தலைநகரான பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இருப்பதால் அந்நாட்டு அரசு வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் பீஜிங்குக்கு அருகில் உள்ள துறைமுக நகரமான தியான்ஜினில் புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் அவர்களில் 2 பேருக்கு புதிய வகை கொரோனா வைரசான ‘ஒமிக்ரான்’ உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் முதன் முதலாக கடந்த மாத மத்தியில் தான் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது தியான்ஜின் நகரில் ஒமிக்ரான் பரவல் 2 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதால் வைரஸ் வேகம் எடுக்குமோ ? என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே இந்த புதிய ஒமிக்ரான் வைரசால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.