செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வீட்டு வசதி வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பூச்சி முருகனுடைய இல்லத் திருமணத்தில் எவ்வளவு கூட்டம் வந்தது என்று நீங்கள் பார்த்து இருப்பீர்கள். அவர்களுக்கெல்லாம் சட்டம் கிடையாது.
ஆனால் அதே சாதாரண ஏழை எளிய மக்கள், நடுத்தர மக்கள் இவர்கள் பெரிய அளவுக்கு திருமணங்களில் மக்களை கூட்டுவதற்கு சட்டம் கிடையாது. ஆனா அவங்களுக்கு சட்டம் இருக்கு. ஆனால் ஏழைக்கு ஒரு நீதி , நடுத்தர மக்களுக்கு ஒரு நீதி, திமுக ஆளும் கட்சிக்கு ஒரு நீதி.
பொங்கல் பரிசு பொருட்கள் 21 கொடுக்கணும் என்று சொல்லிவிட்டு, அதில் பை கிடையாது. 20 பொருள்கள், 18 பொருட்கள் இருந்தது. வந்து தரமானதாக இல்லை. அரிசியில் வண்டு, பல்லி கலந்த புலி, வெல்லமே உடைக்க முடியாது. காங்கிரீட் பதிலாக கொண்டு கொடுத்திருக்கலாம் சிமெண்ட் என்று…. அவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கு என…
அப்படி உடைக்க முடியாத வெல்லம் அது. சில இடத்தில் உருகிய வெல்லம். மிளகுக்கு பதில் பருத்திக்கொட்டை, சீரகத்தூள், மஞ்சள்தூள், இது எல்லாமே ஒரு கலப்படம். அப்போ கிராம சபை கூட்டத்தில் கலைக்க வேண்டிய விஷயங்கள் எல்லாமே பொங்கல் பரிசு என தெரிவித்தார்.