Categories
உலக செய்திகள்

ALERT: மக்களே உஷார்… இதோ வந்துட்டு “DELTACRON”….. உறுதியான பாதிப்பு…. திணறும் ஆய்வாளர்கள்….!!

மத்திய கிழக்கு நாடான சைப்ரஸில் முதல்முறையாக கொரோனாவின் புதிய மாறுபாடான டெல்டாக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் முதல் முதலாக தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை உருமாறி அனைத்து நாடுகளுக்கும் மிக வேகமாக பரவி வருகிறது. அதன்படி தென்னாபிரிக்காவில் புதிதாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் வைரஸ் உலக நாடுகளுக்கு மிக வேகமாக பரவி வருவதால் பொதுமக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.

இந்நிலையில் கொரோனாவின் உரு மாற்றங்களான டெல்டா மற்றும் ஓமிக்ரான் வைரஸை ஒத்திருக்கும் புதியவகை டெல்டாக்ரான் மாறுபாட்டை அறிவியலாளர்கள் முதன் முதலாக மத்திய கிழக்கு நாடான சைப்ரசில் கண்டறிந்துள்ளார்கள்.

இந்த புதிதாக உருமாற்றமடைந்த டெல்டாக்ரானுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் இது மென்மேலும் உருமாற்றமடைந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. இருப்பினும் இது குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், டெல்டாக்ரான் தொடர்பான ஆய்வில் அறிவியலாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |