Categories
தேசிய செய்திகள்

தங்கையுடன் திருமணம்…. நண்பனை கொடூரமாக கொலை செய்த அண்ணன்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

ராஜஸ்தான் மாநிலம் சுரு என்ற மாவட்டத்தில் தன் தங்கையுடன் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்ட நண்பனை, அண்ணன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹரியானா சிறையில் நீதிமன்றக் காவலில் இருந்த போது மணிஷ் மற்றும் விகாஷ் என்ற இருவரும் நண்பர்கள் ஆகியுள்ளனர். அதில் விகாஸ் பெட்ரோல் பங்கில் கொள்ளை அடித்ததற்கும், மணிஷ் கற்பழித்த குற்றத்திற்காகவும்  நீதிமன்ற காவலில் இருந்தனர். அதன் பிறகு ஜாமீனில் வெளிவந்த விகாஸ், மணிஷின் ஜாமீனுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

பிறகு அவரை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றார் விகாஸ். ஆனால் சில நாட்களில் விகாஷின் தங்கையுடன் நட்பாக பழகிய மணிஷ், 10 மாதங்களுக்கு முன்பு அவரது தங்கை பூஜாவுடன் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து அவரை கொலை செய்ய விகாஸ் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் டெல்லியில் வசித்து வந்த தங்கையை தேடிச்சென்று கடந்த சனிக்கிழமை இரவு மனிஷை, விகாஸ் கொலை செய்துள்ளார். இதையடுத்து விகாஸ் தலைமறைவாகி விட்டதாகவும் அவரை போலீசார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |